Breaking News

Chennai Book Fair 2024 சென்னை புத்தகக்காட்சி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும் முழு விவரம்

அட்மின் மீடியா
0
Chennai Book Fair 2024 சென்னை புத்தகக்காட்சி ஜனவரி 21ஆம் தேதி வரை நடைபெறும்  முழு விவரம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் & பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024 சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புத்தக கண்காட்சி 19 நாட்கள் நடைபெற உள்ளது


 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் 47 வது சென்னை புத்தகக் கண்காட்சி 2024 சென்னை நந்தனம் சிஎம் மைதானத்தில் ஜனவரி 3 ம் தேதி தொடங்குகிறது.

இந்த புத்தக கண்காட்சியில் 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்த புத்தக கண்காட்சியில் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.

அதேபோல் மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும்.

ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞர்கள் , எழுத்தாளர்கள் உரை நடைபெறும். அத்துடன் புத்தக கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக ரூபாய் 10 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சி ஸ்டால் விவரம்:- கிளிக் செய்யவும்

https://bapasi.com/cbf-2024-stalls/ 

ஆன்லைனில் டிக்கெட் வாங்க:- கிளிக் செய்யவும்

https://bapasi.com/book-fair-passes/

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback