BurjKhalifa வில் ராமர் புகைப்படம் என பரவும் செய்தி உண்மை என்ன முழு விவரம்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்தது என ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
நேற்று அயோத்தியாவில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து துபாயில் உள்ள மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர செய்யப்பட்டதாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது.
தாவது நேற்றிரவு புர்ஜ் கலிஃபாவில் ராமரின் உருவம் எதுவும் புரொஜக்ஷன் செய்யப்படவில்லை.
ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சில தவறான தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில், ராமரின் உருவம் ஜொலிப்பதை போன்று புகைப்படங்கள் பரவின. பொதுவாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் தங்கள் படத்தின் புரமோஷனுக்காக, படத்தின் பெயர், ஹீரோவின் உருவம் போன்றவற்றை இப்படி ஜொலிக்க வைப்பார்கள். அந்த வகையில் நேற்று ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதால், ராமரின் உருவம் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஜொலிக்க வைக்கப்பட்டது என்று கூறி புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வேகமாக ஷேர் செய்யப்பட்டது.
இங்கு கிளிக் செய்யவும்
https://www.instagram.com/p/CV5qteUhE_r/?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw==
Tags: மறுப்பு செய்தி FACT CHECK
