BREAKING NEWS போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜன.19ம் தேதி வரை தற்காலிக வாபஸ்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வி - திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
- கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்,
- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,
- 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்,
- வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்
ஆகிய 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 9 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக AITUC, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்ததுது.
தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்டம் எனவும் ஜனவரி 9 ம் தேதி முதல் போராட்டம் நடைபெறும் என சிஐடியு , ஏஐடியுசி அண்ணா தொழிற்சங்கம் என பிரதான தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது
இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
6 கோரிக்கைகளில் 2 மட்டும் ஏற்கப்பட்டதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தது, மேலும் இன்று 2வது நாளாக போரட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். நகரத்தில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் இடையூறு செய்ய வேண்டும்? அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாகமாக இருக்கிறீர்கள்,இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன சிக்கல்? எனவும் இருதரப்புக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகலுக்கு பின்பு விசாரனைக்கு வந்த வழக்கில் ஜனவரி 19 வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யு. மற்றும் அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் போக்குவரத்துக் கழகத்திற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்
