Breaking News

பொங்கல் பண்டிகை சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

பொங்கல் பண்டிகை சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள், ரயில்கள் முழு விவரம் 

சென்னை போன்ற நகரங்களில் பணி நிமித்தமாக வசிக்கும் மக்கள் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட வசதியாக தமிழக அரசு சார்பில் கடந்த 12, 13, 14 ஆகிய நாட்களில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அழைப்பு

பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றவர்களுக்காக கடந்த 12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தமாக 11,284 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 13-ம் தேதி மட்டும் திட்டமிடப்பட்டதை விட கூடுதலாக 309 பேருந்துகள் என மொத்தம் 4,310 பேருந்துகள் ஒரே நாளில் இயக்கப்பட்டன. இவ்வாறு 3 நாட்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக சென்னையில் இருந்து 6,54,472 பேர் பயணித்துள்ளனர். கடந்தாண்டு 5.05 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்தனர். இந்தாண்டு 6.54 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து, ஊர் திரும்ப வசதியாக சென்னைக்கு நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. 

நேற்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு வரும் 2,100 பேருந்துகளுடன் 2,028 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.வெளியூரில் இருந்து வருவோர் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில், இன்று (ஜன.17) மற்றும் நாளை (ஜன.18) மாலை, இரவு வேளைகளில் 50 மாநகர பேருந்துகளும், நாளை (ஜன.18), நாளை மறுதினம்(ஜன.19) அதிகாலை ஆகிய வேளைகளில் 125 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படவுள்ளது

ரயில்களைப் பொருத்தவரை, வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்களும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு இயங்க தொடங்கியுள்ளது:-

குறிப்பு:-

பொங்கல் முடிந்துபலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருவார்கள்.. அப்படி வருவோர்கள் கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைபார்கள் ஆனால் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக 1.5 கிலோமீட்டர் தூரம் வேண்டும். அவ்வளவு தூரம் பைகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது..ஆட்டோவில் தான் செல்லவேண்டும்

எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரியில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலையை ஒட்டி அமைந்துள்ளது. அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback