Breaking News

மதுரையில் ஜல்லிகட்டு அரங்கத்திற்க்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது

அட்மின் மீடியா
0

மதுரையில் கட்டப்பட்டு வரும் ஜல்லிகட்டு அரங்கத்திற்க்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சுமார் ₹66 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட இந்த அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, மதுரையில் அலங்காநல்லூர் அருகிலுள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் கிட்டத்தட்ட ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் விறு விறுப்பாக கட்டப்பட்டு வருகிறது.!

இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் அரை வட்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது

இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் ஜனவரி 23-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்க இருக்கிறார்

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட இந்த அரங்கத்திற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.




 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback