Breaking News

தமிழகத்தில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம் ,பயணிகள் அச்சமின்றி பயணிக்கலாம் போக்குவரத்து துறை அமைச்சர்

அட்மின் மீடியா
0

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. 

தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அனைத்து பேருந்துகளையும் தடையின்றி இயக்குவதற்கு பேருந்து நிலையங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் வழக்கம் போல் அனைத்து வழித்தடங்களிலும் பயணிகளுக்கு எவ்வித சிரமம் இன்றி பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் மேலாண் இயக்குநர்  தெரிவித்துள்ளார்.


பொதுமக்கள் அரசு பேருந்துகளில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேருந்துகள் குறித்த நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்

பேருந்துகளை வழக்கம் போல இயக்க வேண்டும் என்று தொமுச பேரவைப் பொதுச்செயலா் மு.சண்முகம் வேண்டுகோள் விடுத்துளளாா்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 15-ஆவது ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்; போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு அதிமுக ஆட்சியாளா்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயா்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஒவ்வொன்றாக தீா்த்து வருகிறது. அதைப்போல, இந்தக் கோரிக்கைகளையும் அரசு தீா்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்கிறோம். பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அதிமுக தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கைகளை தீா்க்க தொமுச பேரவை துணை நிற்கும் என்று கூறியுள்ளாா்.

ஏஐடியுசி, எச்.எம்.எஸ்., ஐஎன்டியூசி ஆகிய சங்கங்கள் சாா்பில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையோடு இணைந்து போராட்டத்தை சிஐடியு எதிா்கொள்ள வேண்டாமென ஒன்றாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

எவ்வித அரசியல் உள்நோக்கமும் இன்றி, தொழிலாளா்களின் நலனை மட்டுமே மையப்படுத்தி இந்த வேலை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா தொழிற்சங்கப் பேரவை அரசியல் நோக்கத்தோடு இந்த வேலை நிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. அதனுடன் சோந்து இயங்குவது பற்றி சக தொழிற்சங்கங்களோடு எந்தக் கலந்துரையாடலும் இல்லாமல், அண்ணா தொழிற்சங்கப்பேரவையுடன் ஒரு கூட்டமைப்பை சிஐடியு உருவாக்கி இருப்பது சரியல்ல.இதுவரை போராட்ட களங்களில் இணைந்து நின்ற தோழமைத் தொழிற்சங்கங்களை விட்டுவிட்டு, அரசியல் செய்ய முனைவோருக்கு உதவும் வகையில் போராட்ட நோக்கத்தை மாற்றிவிட வேண்டாம் என்று சிஐடியு-வை தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை 103.60%, விழுப்புரம் 76.50%, சேலம் 96.99%, கோவை 95.48%, கும்பகோணம் 82.98%, மதுரை 97.41%, நெல்லை 100% பேருந்துகள் இயக்கப்படுகிறது. காலை 6 மணி நிலவரப்படி கோட்டம் வாரியாக பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் பேருந்துகளில் 50% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. 

போக்குவரத்து ஊழியர்கள் இன்றுமுதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 32 பேருந்து பணிமனைகளில் இருந்து தற்போதுவரை 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

போராட்டத்தில் இருந்து விலகிய காங்கிரஸ் தொழிற்சங்கம் மக்கள் பாதிக்கக் கூடாது என்ற நோக்கில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகுகிறோம் என்று காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சி அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback