அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு அழைப்பு
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் ;அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இரண்டு நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு தற்காலிக ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தற்காலிகமாக பேருந்துகளை ஓட்டுவதற்கும் நடத்தினர் பணிக்கும் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவித்துள்ளது. உரிய பயிற்சி பெற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ,அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
Tags: தமிழக செய்திகள்
