ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் இருதயத்தில் இரத்த அடைப்பு உள்ளது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதுஅதன்பின்பு நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.
செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவரிடம் இருந்த இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன.
அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது
மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதற்கு இடையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீட்டிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி செந்தில் பாலாஜி அமைச்சரவை நீடிப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய முடியும் எனக்கு கூறி வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியானதே எனவும்
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
