இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! - பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு! - பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
- போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
- கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்,
- ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
- புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்,
- 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்,
- வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்
ஆகிய 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 9 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக AITUC, CITU உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது
சிஐடியு சங்க தலைவர் செளந்தரராஜன் அவர்கள் :-
போக்குவரத்து ஊழியர்கள் வைத்த கோரிக்கைகள் எதையும் ஏற்க முடியாது என அரசு தெரிவித்துவிட்டது. இது நியாயமற்ற பதில். போக்குவரத்து தொழிலாளர்களை இரண்டாம் தர குடிமக்களாக இந்த அரசு பார்க்கிறது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எங்களிடமிருந்து பிடித்து வைத்துக் கொண்ட பணத்தைத்தான் நாங்கள் கேட்கிறோம். எனவே வேலைநிறுத்ததை திரும்பப் பெற முடியாது. தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள் இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.
நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது. நீண்டதூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும்” என்றார்
இந்த நிலையில், நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக என்னிடம் தெரிவித்து உள்ளன. எனவே நாளை பேருந்துகள் இயக்கப்படும். இரு கோரிக்கைகளை தற்போது ஏற்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மற்றவை குறித்து பொங்கலுக்கு பின் முடிவு எடுக்கலாம் என கூறிய பின்பும் போராட்டம் அறிவித்துள்ளனர் என கூறினார்.
மேலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி 11,006 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயங்கும். மாநிலம் முழுவதும் 19,484 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோயம்பேடு, தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் - அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்
