Breaking News

வீட்டு வேலைக்கு வந்த சிறுமி வன்கொடுமை எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

அட்மின் மீடியா
0

சிறுமிக்கு வன்கொடுமை எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய புகாரில் பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மர்லினா மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு.SC, ST வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு

 


வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் மெர்லினா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆகியோர் சென்னை திருவான்மியூர் தெற்கு அவென்யூ பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார்கள் இவர்கள் வீட்டு வேலைக்காக ரேகா சேர்ந்துள்ளார் இந்த இளம் பெண்ணுக்கு மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என கூறியுள்ளார்கள்

ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளனர். இதனால் கடந்த ஜூலை மாதம் அந்த இளம்பெண் தனக்கு வேலை வேண்டாம் என்று கூறி சொந்த ஊருக்கு செல்வதாக மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணனிடம் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த மெர்லினா, ஆன்ட்ரோ மதிவாணன் தம்பதியினர், ரேகாவை வேலை செய்யுமாறு மிரட்டி, அடித்து, முகம், கை, கால்களில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்கள் மேலும் பொங்கல் அன்று மெர்லினா மற்றும் ஆண்ட்ரோ மதிவாணன் இருவரும் இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு ரேகாவின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று அவர்கள் வீட்டில் விட்டுவிட்டனர். 

மகள் வீட்டிற்கு வந்ததை பார்த்து அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இளம்பெண்ணின் முகம், கை, கால்களில் காயம் ஏற்பட்டதைக் கண்ட தாய் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். 

அதோடு, தன் மகளை எவ்வளவு கொடூரமாக சித்ரவதை செய்தார்கள் என்று தாய் அழுதுகொண்டே கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது

இந்த சம்பவம் குறித்து ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவர் மனைவி மீது எஸ்,சி, எஸ்,டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பணிப் பெண்ணை மகன், மருமகள் துன்புறுத்திய விவகாரத்திற்கும், எனக்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது எனவும் திருமணத்திற்குப் பின் கடந்த 7 ஆண்டுகளாக மகன் தனியாக வசிக்கிறார் என்றும் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு உடன்படுவேன் எனவும் விளக்கம் அளித்துள்ளார் திமுக எம்.எல்.ஏ E.கருணாநிதி அவர்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback