Breaking News

வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு புதிய ஆம்புலன்சை தன் சொந்த பணத்தில் வழங்கிய நடிகர் பாலா முழு விவரம்

அட்மின் மீடியா
0

வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு புதிய ஆம்புலன்சை வழங்கிய நடிகர் பாலா முழு விவரம்

வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த பணத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. 

 

தனியார் தொலைகாட்சி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு சீசன் 6 மூலமாக சின்னத்திரைக்கு வந்ததவர் தான் பாலா. அதனை தொடர்ந்து சினிமால் புலிக்குத்தி பாண்டி, நாய் சேகர் ரிடர்ன்ஸ், காக்டைல், தும்பா, ஜூங்கா உள்ளிட்ட படங்களிலும் பாலா நடித்துள்ளார்

இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்து வருகிறார். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது தொடங்கி முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்தி குடுப்பது வெண்டிலேட்டர் உட்பட உயிர்காக்கும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என பல சமூக சேவைகளை செய்துவருகிறார் பாலா

இவர் கடந்த ஆண்டு அறந்தாங்கியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல் முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார். அதனைதொடர்ந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள குன்றி மலைப்பகுதியில் உள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மலை கிராம மக்கள் பயன்படுத்தும் விதமாக ஆம்புலன்ஸ் வாகனத்தை வழ்ழங்கினார் நடிகர் பாலா தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார், அதனை தொடர்ந்து ஈரோடு அருகே உள்ள சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கும் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தான் தங்கியிருந்த அனகாபுத்தூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.3 லட்சத்தை, அப் பகுதி மக்களுக்கு தலா 1000 வீதம் ரொக்கமாக நேரில் சென்று வழங்கினார்.

இந்தநிலையில்,  கடந்த மாதம் சென்னையில் உள்ள அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் ஆகிய பகுதியில் உள்ள மக்களுக்காக இலவச ஆட்டோ ஒன்றை வழங்கி உள்ளார் பாலா.

இந்நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்தில் பொதுமக்களுக்காக தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார் பாலா. 

இது குறித்து செய்தியாளர்களிடம் பாலா தெரிவிக்கையில்:-

இந்த கிராமத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒரு கர்ப்பிணி பெண்ணை கயிறு கட்டி கீழே இறக்கியதாக ஒரு செய்தி பார்த்தேன். இங்கு வந்து பார்த்தபிறகு தான் தெரிந்தது, அப்படி கயிறு கட்டி இறக்கும்போது நிறைய பெண்களுக்கு பாதிவழியிலேயே பிரசவம் ஆகிவிடுறது என்று. 

இந்த கிராமத்துக்கு ஏறிவருவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனவே இந்த ஐந்தாவது ஆம்புலன்ஸை இந்த கிராமத்துக்கு வழங்கியுள்ளேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தருபவர்களுக்கு மிக்க நன்றி என தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback