Breaking News

இனி சிங்கப்பூரில் இருந்து இந்தியர்கள் நேரடியாக இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
இனி சிங்கப்பூரில் இருந்து இந்தியர்கள் நேரடியாக இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம் முழு விவரம்

இனி சிங்கப்பூரில் இருந்து இந்தியர்கள் நேரடியாக இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம்!

இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இடையேயான எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தின் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது



சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் இப்போது நேரடியாக இந்தியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பலாம் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக BHIM, Paytm மற்றும் PhonePe செயலிகளைப் பயன்படுத்துபவர்களுக்கும், Axis Bank, DBS India, ICICI, இந்தியன் வங்கி, Indian Overseas, SBI உள்ளிட்ட வங்கிகளின் பயனர்களுக்கும் இந்த வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணப்பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்சிஸ் வங்கி, DBS வங்கி இந்தியா, ICICI வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகள் அந்த செயலிகள் மூலம் இந்தச் சேவையை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பேங்க் ஆப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஃபெடரல் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், இண்டஸ்இண்ட் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கி ஆகியவை விரைவில் இந்த இணைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.UPI மூலம் பணம் அனுப்புவது மிகவும் பாதுகாப்பானது. 24 மணி நேரமும் தங்கு தடையின்றிப் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback