Breaking News

சென்னையில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்து

அட்மின் மீடியா
0

சென்னை, ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில், பறக்கும் ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

பறக்கும் ரயில் பணிக்குப் பாலம் அமைக்கும்போது, இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி இடிந்து விழுந்ததால், இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. 


இது தொடர்பாக போலீஸார் அங்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இந்த மேம்பால விபத்து தொடர்பாக விசாரணைக்கு தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது

சென்னை- ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில் பறக்கும் ரயில் பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது.

வேளச்சேரி- செயின்ட் தாமஸ் மவுண்ட் இணைக்கும் வகையில் சுமார் 80 அடி நீளம், 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது

 இதில் ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில் பறக்கும் ரயில் பால கட்டுமான பணியின் போது இரு தூண்களுக்கு இடைப்பட்ட பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது

அச்சமயம் யாரும் இல்லாததால் உயிரிழப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை

Give Us Your Feedback