இதுதான் மத நல்லிணக்கம் இளையான்குடி அருகே பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் முழு விவரம்
இதுதான் மத நல்லிணக்கம் இளையான்குடி அருகே பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் முழு விவரம்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் தேதி மஸ்ஜிதே இலாஹி- என்ற பெயரில் மசூதி கட்டி அதன் திறப்பு விழா 21 ம்தேதி நடைபெற்றது.
ஊர் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் சந்திப்புகள், பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் அனைத்து மதத்தினரும் விழாவை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்
புதிய இறை இல்லத் திறப்பு விழா சிறக்க வாழ்த்துகிறோம்." என்று குறிப்பிட்டு ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கமும்,
எங்கள் உறவுகளின் புதிய இறையில்லத் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்." என புனித சகாய அன்னை ஆலயத்திற்கு உட்பட்ட கத்தோலிக்க கிறித்தவ இறைமக்கள் மற்றும் இளையோர் அமைப்பினரும் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் பள்ளிவாசல் திறப்புவிழாவுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஊர்வலமாக சென்றனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர்.
கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர்.சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத்தார்கள் மற்றும் ஊர் மக்கள் அவர்க்ள் வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.
மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி
