Breaking News

சென்னை ஆட்டோக்கள் பர்மிட் இனி சிஎம்டிஏ எல்லை வரை நீட்டிப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை ஆட்டோக்கள் பர்மிட் இனி சிஎம்டிஏ எல்லை வரை நீட்டிப்பு முழு விவரம்

 


சென்னை ஆட்டோக்களின் பர்மிட்டுகளை சிஎம்டிஏ எல்லைவரை நீட்டித்து போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது

இதன்மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் வரை ஆட்டோக்களை இயக்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

தற்போது சென்னையில் பதிவு செய்யப்பட்ட ஆட்டோக்களுக்கான எல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால், எல்லைத் தாண்டியதாக ஆட்டோக்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது.

இதுவரை இருந்த நடைமுறையின் படி எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆட்டோக்களுக்கு எடுக்கப்படும் பர்மிட் அதனை சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் வரை மட்டுமே இயக்க முடியும் என இருந்தது. இதனால் சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை ஆட்டோக்கள் செல்வதில் பிரச்சனை நீடித்து வந்தது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback