ஆதார் அட்டை இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது - இபிஎப்ஓ அறிவிப்பு
ஆதார் அட்டை இனி பிறப்பு சான்று ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது - EPFO
பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டு இருந்தது இதனால் ஆதார் சட்டம் 2016-ன் கீழ், தனிநபரின் தனித்துவ அடையாளத்துக்காக ஆதார் பயன்படும்போது, பிறந்த தேதிக்கான சான்றாக அவை தகுதி பெறாது என்ற வலியுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,
இபிஎப்ஓ ஜனவரி 16, 2024 தேதியிட்ட ஒரு குறிப்பிடத்தக்க சுற்றறிக்கையை (எண்: WSU/2024/1/UIDAI மேட்டர்/4090) வெளியிட்டுள்ளது. பிறந்த தேதிக்கான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் நீக்கப்பட்டதாக சுற்றறிக்கை அறிவிக்கிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) உத்தரவுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து UIDAI
ஆதார் பல்வேறு நிறுவனங்களால் DoBக்கான ஆதாரமாக கருதப்படுவதை UIDAI கவனித்துள்ளது.ஆதார், ஒரு தனித்துவமான அடையாளங்காட்டியாக இருந்தாலும், ஆதார் சட்டம், 2016 இன் படி பிறந்த தேதிக்கான ஆதாரமாக அங்கீகரிக்கப்படவில்லை.ஆதார் அடையாளச் சரிபார்ப்பை வழங்குகிறது, பிறப்புச் சான்று அல்ல என்று UIDAI வலியுறுத்துகிறது.
UIDAI இன் உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக, பிறந்த தேதியை சரிசெய்வதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதாரை நீக்குகிறது.
இனி ஆதார் அட்டையை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று இபிஎப்ஓ அறிவித்துள்ளது.
அதன்படி இனி பிறப்பு ஆவணங்களுக்கு ஆதார் அட்டையை கொடுக்க கூடாது. அதை கொடுத்துள்ளவர்கள் உடனே பிறப்பு சான்றிதழை வழங்க வேண்டும். பிறப்பு சான்றிதழ் மட்டுமே பிறப்பு சான்றாக ஏற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags: இந்திய செய்திகள்
