கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அறிவிப்பு
சென்னை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்
ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்துதான் புறப்படும் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் போக்குவரத்தால் கடும் நெரிசல் ஏற்படுகின்றது .இதனை குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள ஊரப்பாகம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் மிக பிரம்மாண்ட பேருந்து நிலைய பணிகள் கடந்த 2019 ல் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது .தற்போது இந்த பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது
இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரயில் நிலையம் வரும் வரை ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்துதான் புறப்படும் எனவும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதையே இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.என தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்
