Breaking News

விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிட அறிவுறுத்தல்

அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் உத்தரவு

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதை தடுக்க கோரி சென்னை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகளை தயாரிக்க மதுரை கிளை தடை விதித்துள்ளது குறித்தும், விரிவான விளம்பரங்கள் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற சிலைகள் செய்யாமல் தடுக்க முடியும் என கூறினார்.

மேலும் விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக , முன்கூட்டியே நடவடிக்கை எதுவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் 

சிலை கரைப்பால் நீர்நிலை மாசுபடுவது மட்டுமின்றி கரைக்கப்படாத பாகங்கள் எடுக்கும் பொறுப்பு அரசுக்கு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். 

மேலும், விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிடவும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback