Breaking News

ஆந்திராவின் காக்கிநாடா கடற்பகுதியில் புதிய எண்ணெய் வளம் கண்டுபிடிப்பு! மத்திய பெட்ரோலிய அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ஆந்திராவின் காக்கிநாடா கடற்பகுதியில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் அறிவித்துள்ளார்

ஆந்திராவின் காக்கிநாடா கடற்கரை பகுதியில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சர் தகவல். ஒரு நாளைக்கு 45,000 பேரல்கள் வரை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்!

2016ம் ஆண்டு இதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டன. நாட்டின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில், இங்கிருந்து 7% எண்ணெய் மற்றும் 7% எரிவாயு எடுக்க முடியும் என அமைச்சர் தகவல்


காக்கிநாடா கடற்கரையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிருஷ்ணா கோதாவரி படுகையில்  26 கச்சா எண்ணெய் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன எனவும் அதிலிருந்து வெற்றிகரமாக முதல் எண்ணெய் பிரித்து எடுக்கப்பட்டது: என மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார்

இந்தியாவில் கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டு எண்ணெய் வெற்றிகரமாக பிரித்தெடுக்கபட்டதாகவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி தெரிவித்துள்ளார் .

இது குறித்து மத்திய அமைச்சர் கூறுகையில்:-

அரசுக்கு சொந்தமான  ONGC  எண்ணெய் நிறுவனம் வங்காள விரிகுடாவில் உள்ள காக்கிநாடா கடற்கரையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கிருஷ்ணா கோதாவரி படுகையில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் நேற்று (ONGC) எடுக்கப்பட்டது என்பதை எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.மேலும் மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஒரு நாளைக்கு 45,000 பீப்பாய்களைத் எடுக்கப்படும் எனவும்  இது நமது மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் 7 சதவீதமாக இருக்கும் என அவர்  கூறினார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback