நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு விவரம்
நாடாளுமன்ற தேர்தல் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு விவரம்
இந்நிலையில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 எம்.பி.சீட்களை எதிர்பார்க்கும் முஸ்லீம் லீக், திமுக தொகுதி பங்கீட்டு குழு தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் போது அதுபற்றி பேச திட்டமிட்டுள்ளது.
அதில் தற்போது ராமநாதபுரம் தொகுதியின் கட்சி எம்பியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனி உள்ளார்
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் தென் மண்டல அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர்மொய்தின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது
75 ஆண்டு காலமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுகவோடு நூறு சதவீத நட்புணர்வோடு பழகி வருகிறது. கூட்டணி தர்மத்தை காத்து வருகிறது. நிபந்தனை இல்லாத முழு ஆதரவு திமுக கூட்டணிக்கும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் அளிக்கப்படும். மேலும் கடந்த முறை ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று நவாஸ்கனி நாடாளுமன்ற உறுப்பினாரக உள்ளார்
அதேபோல தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியை மீண்டும் கேட்டு பெற்று வெற்றி பெறுவோம் என கூறினார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
