Breaking News

இன்று முதல் சென்னையில் ஆம்னி பேருந்து இயக்க தடை கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்து இயக்கவேண்டும் அமைச்சர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இன்று முதல் சென்னையில் ஆம்னி பேருந்து இயக்க தடை கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்து இயக்கவேண்டும் அமைச்சர் அறிவிப்பு

அமைச்சர் சேகர்பாபு அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, "ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக அரசு செயல்பட முடியாது

இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்கனவே ஒத்து கொண்டது போல், செயல்பட வேண்டும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றது போல் செயல்பட வேண்டும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்

சென்னை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி திறந்து வைத்தார்.ஜன.24-ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளையும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்றுஉரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பேருந்துகளை நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் போதிய இடவசதி, பயணிகள் எளிதில் கிளாம்பாக்கத்தை அடையும் வகையில் போக்குவரத்து வசதி போன்றவற்றை செய்து தரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த 21-ம் தேதி உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான கட்டுமான பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துள்ளன. அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர சிஎம்டிஏ ஒப்புதல் அளித்துள்ளது. தவிர, விரைவு பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்குவது சரியாக இருக்காது. எனவே, 24-ம் தேதி (இன்று) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback