Breaking News

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் திடீர் ராஜினாமா முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் ஆளும் திமுக அரசு ஆட்சி பொறுப்பை கடந்த 2021 ம் ஆண்டு ஏற்றது  அதன்பின்பு தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் இதுவரை திறம்பட பல்வேறு வழக்குகள் நடத்தி வந்தார் தொடர்ந்து பணியில் நீடித்து வந்த தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் தற்போது ராஜினாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.அதில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக சொல்லப்படுகிறது. தனித்த முறையில் வழக்கறிஞராக இயங்க அவர் முடிவு செய்துள்ளதாகவும், இனி தனிப்பட்ட வழக்கறிஞர் தொழிலை (Private Practice) நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

கூடிய விரைவில் புதிய தலைமை வழக்கறிஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1977-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கில் அரசு தரப்பில் அவர் ஆஜராகி இருந்தார். 1996 முதல் 2001 வரையில் தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞராக அவர் செயல்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback