சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் பள்ளிகல்விதுறை அறிவிப்பு
மழை பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையில் நான்கு சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
ஜனவரி மாதம் 6 மற்றும் 20 ஆம் தேதிகளியும், பிப்ரவரி மாதம் 3 மற்றும் 17 தேதிகளில் உள்ள சனிக்கிழமை பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை அட்டவணையிலும், பிப்ரவரி 3-ம் தேதி புதன்கிழமை அட்டவணையிலும், பிப்ரவரி 17-ம் தேதி வியாழக்கிழமை அட்டவணையிலும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
