காஞ்சிபுரத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் வைரல் வீடியோ
காஞ்சிபுரத்தில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல் வைரல் வீடியோ
வடகலை - தென்கலை பிரிவினர் இடையே மோதல்!காஞ்சிபுரம் பழைய சீவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது திடீரென ஒருவருக்கு ஒருவர் அடித்து கொண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது, அந்த வீடியோ இணையத்தில் தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது,
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் கண்டருளுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கண்ணாடி பல்லக்கில் புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத், வழியாக கிராமங்கள் தோறும் மண்டகப்படி கண்டருளி பழையசீவரம் கிராமத்தில் உள்ள மலை மீது எழுந்தருளினார்.
அப்போது பழையசிவரம் பகுதியில் பார்வேட்டை உற்சவத்தின் போது பிரபந்தம் பாடுவதில் வடகலை தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் திடீரென கைகளைப்பாக மாறி ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டனர்
வீடியோ பார்க்க:-
இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/rajtweets10/status/1747817924914749462
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ
