மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ரெட்டணை அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் முதல்வர் பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவி தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து மாணவின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் பள்ளியின் முதல்வர்கார்த்திகேயன் (வயது 45) மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது
உடனடியாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பள்ளி முதல்வரை காவலர்கள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
