கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாதாந்திர பஸ் பாஸ் விற்பனை மையம் செயல்படும் என அறிவிப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பிப். 1ம் தேதி முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும்;பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
kilambakkam monthly bus pass கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி, 01.02.2024 முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) செயல்பட உள்ளது - மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கிஸ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், கடந்த 30.12.2023 அன்று புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், பொதுமக்கள் நலன் கருதி, 01.02.2024 முதல் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் (MST Counter) செயல்பட உள்ளது.
இப்பயணச்சீட்டு விற்பனை மையத்தில், விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000/- மதிப்பிலான பயண அட்டை TAYPT (ஒவ்வொரு மாதமும் 16-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை), மாதாந்திர சலுகை பயண அட்டை MST (மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை) மற்றும் 50% மாணவர் சலுகை பயண அட்டை SCT (ஒவ்வொரு மாதமும் 11-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை) பயணம் செய்யக்கூடிய பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வழங்கப்படும்.
மேலும், 60 வயது பூர்த்தியடைந்த மூத்தக் குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையுடன் 10 எண்ணிக்கை கொண்ட டோக்கன்கள். மா.போ.கழக கிளாம்பாக்கம் பணிமனையிலும் வழங்கப்படும்.
எனவே, பயணிகள் இதனை பயன்படுத்தி, கிளாம்பாக்கம் மாநகர் போக்குவரத்துக் கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்
