உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்துள்ளது - இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கை
ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் மசூதி எழுப்பப்படுவதற்கு முன்பு ஒரு கோவில் இருந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் அது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மசூதியின் கிழக்கு பகுதி சுவர் இந்து கோவிலின் மீதமாக உள்ளது என தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்
உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி இந்துக் கோவிலை இடித்தேக் கட்டப்பட்டுள்ளது
இந்து தெய்வங்களின் சிற்பங்கள் மற்றும் செதுக்கப்பட்ட கட்டிடக் கலைகள், பள்ளிவாசலில் காணப்படுகிறது
ஏற்கனவே இருந்த கோவிலின் தூண்கள் உட்பட சில பகுதிகள் தற்போதுள்ள கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன என இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
உத்திரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதிக்க வேண்டும் என வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வாரணாசி கோர்ட்டு உத்தரவிட்டது. ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் ஞானவாபி மசூதிக்குள் உள்ளது சிவலிங்கம் அல்ல என்றும் அது செயற்கை நீரூற்று அமைப்பு இவர்கள் சிவலிங்கம்னு சொல்றது, தொழுகைக்கு பள்ளிவாசல் செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான் அனைத்து மசூதியிலும் செயற்கை நீரூற்று அமைப்பு இருக்கும் என மசூதி தரப்பில் கூறப்பட்டது கூறினார்கள்,மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது
மேலும் வாரணாசி மாவட்ட நீதிமன்றமே இது குறித்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதிக்கு எதிரான மனுக்கள் விசாரணைக்கு உகந்தவைதான் என தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் மசூதிக்குள் இருக்கும் சிவலிங்கத்தின் காலத்தை கண்டறிய, 'கார்பன் டேட்டிங்' சோதனைக்கு உட்படுத்த அனுமதிக்க வேண்டும்,' என இந்து அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்கும்படி இஸ்லாமிய அமைப்புகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்க்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல செய்ய அறிவுறுத்தியது அதன்படி, இஸ்லாமிய அமைப்பு மனு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில், இஸ்லாமிய அமைப்பு மனுவை தள்ளுபடி செய்து, ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.மசூதியில் அகழாய்வு நடத்தக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்புகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் ஆய்வு மேற்கொண்டது
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அறிக்கையின் படி:-
17 ஆம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சியின் போது ஏற்கனவே இருந்த கோவில் அழிக்கப்பட்டது.
மசூதி கட்டப்படுவதற்கு முன்பு ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் ஒரு இந்து கோவில் இருந்துள்ளது அவுரங்கசீப்பின் ஆட்சியின் போது அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் அதன் ஒரு பகுதி தற்போதுள்ள கட்டமைப்பில் மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்பட்டது.எனவும்
அறிவியல் ஆய்வுகள் / கணக்கெடுப்பின் அடிப்படையில், கட்டடக்கலை எச்சங்கள் பற்றிய ஆய்வு, அம்சங்கள் மற்றும் கலைப்பொருட்கள், கல்வெட்டுகள், கலை மற்றும் சிற்பங்கள், தற்போதுள்ள கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பு ஒரு இந்து கோவில் இருந்தது என்று கூறலாம்," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இதையடுத்து, வாரணாசி நீதிமன்றமும் ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. எனினும், ஞானவாபி மசூதி தரப்பில் ஆய்வறிக்கையை வழங்கும்படி வலியுறுத்தப்பட்டது. இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும். ஆனால், அதை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.மேலும், ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்திருப்போம், பொதுவெளியில் வெளியிட மாட்டோம் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து இரு தரப்பினரும் ஆய்வறிக்கையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் உத்தரவிட்டிருக்கிறார்.
தற்போது ஞானவாபி வளாகம் அமைந்துள்ள இடத்தில், ஏற்கனவே மிகப்பெரிய ஹிந்து கோவில் இருந்ததற்கான சாட்சியங்கள், தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த ஹிந்து கோவிலின் துாண்களில் சிறிய மாற்றங்கள் செய்து, அதன்மீது கட்டுமானங்களை எழுப்பி ஞானவாபி வளாகத்தை கட்டமைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானவாபி வளாகத்தின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், ஏற்கனவே இருந்த ஹிந்து கோவிலின் ஒரு பகுதி என்றும் தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹிந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட சிலைகள், அங்குள்ள நிலத்தின் கீழ் புதைக்கப்பட்டு இருந்ததையும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதையும் அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஹிந்து கோவிலில் இருந்த கல்வெட்டுகளில் தேவனகரி, தெலுங்கு, கன்னடம், கிராந்தி உட்பட 32 வகையான எழுத்துகள் இருந்ததையும் கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த எழுத்துகளின் வாயிலாக ஜனார்த்தனா, ருத்ரா, உமேஸ்வரா ஆகிய மூன்று ஹிந்து கடவுள்களின் பெயர்களும் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.என ஹிந்து அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்துள்ளார்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி
