Breaking News

மூடப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து தமிழ் வழி கல்விச் சான்றிதழ் - நெறிமுறைகள் வெளியீடு

அட்மின் மீடியா
0

மூடப்பட்ட கல்வி நிறுவனங்களில் முன்பு பயின்ற மாணவர்கள் தமிழ் வழி கல்விச் சான்று பெறுவது தொடர்பான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..


இதுகுறித்து,மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டஉத்தரவு:

தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க சட்டம் இயற்றப்பட்டது. நேரடி நியமனத்துக்கான காலிப் பணியிடங்களில் 20 சதவீத பணி யிடங்களை தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய சட்டம் வழிவகை செய்கிறது. 

தமிழ் வழியில் பயின்றவர்களின், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால் யாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது குறித்த கேள்வி எழுந்தது. பள்ளிகள் அளவில் பிரச்னை எழுந்தபோது, அதற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு தீர்வு காணப்பட்டது. அதன்படி, பள்ளிகள் மூடப்பட்டு இருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது உரிய அலுவலரிடம் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி அளவிலான இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்த நிலையில், கல்லூரிகளிலும் இதே பிரச்னை எழுந்தது.

எனவே, இதற்கும் இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. அதன்படி, உயர்கல்வித் துறை, வேளாண்மை, மருத்துவம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம், சட்டம் ஆகிய துறைகளுக்கு உட்பட்ட கல்லூரிகள் மூடப்பட்டிருந்தால், அந்தக் கல்லூரிகள் ஏற்கெனவே இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழைப் பெற்று அளிக்கலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணி நியமனங்களில், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் இயற்றப்பட்டது. 

தமிழ் வழி சான்றிதழை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி.. 

https://www.adminmedia.in/2022/10/how-to-apply-pstm-certificate-online.html

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback