Breaking News

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்து தமிழக அரசு பயிற்சி முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகளையும், சட்டதிட்டங்களையும் குறித்த பயிற்சி வரும் 31.01.2024 முதல் 02.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள். ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவனியின் மாற்று விகிதங்கள். காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.



ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்:

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். தொழிற்பேட்டை, சிட்கோ பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை  600032.44-22252081/22252082, 8668102600/ 86681 00181.

அரசு சான்றிதழ் வழங்கப்படும்

முன்பதிவு அவசியம்:


PRESS RELEASE Entrepreneurship Development and Innovation Institute Three Days Export Opportunity Identification & Marketing Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Chennai is organizing on "Export Opportunity Identification & Marketing" from 31.01.2024 to 02.02.2024 (Time: 10.00 am to 5.00 pm) at EDII-TN, SIDCO Industrial Estate, EDII Office Road, Ekkattuthangal, Chennai 600032. Subjects covered under the topics on Basics of International Trade, International Marketing methods, Licensing procedures, Identifying potential products for exports, Product classification and its Harmonized System codes, information on importers and markets, Processing and negotiating an Export Order. Besides, inputs on topics such as India's Foreign Trade Policy, Export Incentives, Export Finance, Export Promotion Schemes & Incentives for Exporters. Interested candidates above 18 years of age with 10th STD qualification may register their names with EDII, Website. Entrepreneurs who are already in export business may also enroll to sharpen their skills. For further information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information. 

Pre registration required 

For further details please contact: Entrepreneurship Development and Innovation Institute - Telephone and Mobile No: 044-22252081, 22252082, 8668102600 / 86681 00181. Issued By:- DIPR, Secretariat, Chennai - 9

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback