Breaking News

காதலிக்காக பெண் வேடத்தில் போட்டித்தேர்வு எழுதிய காதலன் மாட்டிக்கொண்டது எப்படி...

அட்மின் மீடியா
0

காதலிக்காக பெண் வேடத்தில் போட்டித்தேர்வு எழுதிய காதலன் மாட்டிக்கொண்டது எப்படி... 




பஞ்சாப் மாநிலத்தில் தனது காதலியைப் போல் வேடமிட்டு, ஆதார் கார்டு, ஹால் டிக்கெட் என போலி ஆவணங்களை உருவாக்கி போட்டித்தேர்வு எழுத சென்ற காதலனை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜனவரி 7ம் தேதி நடைபெற்றது. பாபா பரித் பல்கலைகழகம் சார்பில் டிஏவி பப்ளிக் பள்ளியில் இந்த தேர்வுகள் நடைபெற்றது. இதில் பரம்ஜித் கவுர் என்ற பெண் ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வருகை தந்திருந்தார். சிவப்பு நிற வளையல்கள், உதட்டுச் சாயம் மற்றும் பெண்களின் உடையில் இருந்ததால் அவரை உள்ளே அனுமதித்துள்ளனர்.

ஆனால் தேர்வர்கள் அனைவரும் தங்களது விரல் ரேகைகளை வைக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளார்க ,அப்போது பரம்ஜித் கவுர் கை ரேகை விழாததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பெண் அல்ல, ஒரு ஆண் என்பது தெரிய வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக அவரைப் பிடித்த அதிகாரிகள், போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவரது பெயர் அங்ரேஷ் சிங் என்பதும், அவர் பரம்ஜித் கவுரின் காதலன் என்பதும் தெரியவந்தது. பரம்ஜித் கவுர் விண்ணப்பங்களை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்து மேலும் போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback