Breaking News

ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பினால் சட்டப்படி குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல, மற்றவர்களுக்கு அனுப்பினால் சட்டப்படி குற்றம் - சென்னை உயர்நீதிமன்றம்

ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து


ஆபாச படங்களை பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் ஆபாச படங்களை பார்ப்பது தவறல்ல என்றும் அந்த படங்களை பிறருக்கு பகிர்ந்தால் மட்டுமே சட்டப்படி தவறு என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த ஆண்டு சென்னையில் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக கைது செய்யப்பட்டு இருந்தார், இந்நிலையில் ஆபாச படங்களை ஆன்லைனில் இருந்து டவுன்லோட் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமில்லை என்றும் அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என்று கூறிய நீதிமன்றம் ஆபாச படங்கள் பார்த்ததாக இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

ஆபாச படங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர் என அவர்கள் மீது பழி சொல்லாமல் அவர்களை அதில் இருந்து மீட்க அறிவுரைகள் வழங்குமளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். பள்ளிகளில் இருந்தே அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அதேபோல் கடந்த ஆண்டு கேரளாவிலும் இதேபோல் ஒருவழக்கில் மற்றவர்களுக்கு தொந்தரவு செய்யாமல், யாருக்கும் பகிராமல் தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்கள் பார்ப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. சட்டப்படி அதை குற்றமாக கருத முடியாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback