மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல், கைகலப்பு! வைரல் வீடியோ
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதல், கைகலப்பு! வைரல் வீடியோ
மாலத்தீவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் சீன ஆதரவு கொண்ட மொஹமட் முய்ஸூ ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஆளும் கட்சியாக மக்கள் தேசிய காங்கிரஸ் (பி.என்.சி) மற்றும் மாலத்தீவு முற்போக்கு கட்சி (பிபிஎம்) ஆகியவை உள்ளன. எதிர்கட்சியாக மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) உள்ளன.
முய்சு அமைச்சரவைக்கான நாடாளுமன்ற ஒப்புதலுக்கு இன்று முக்கிய வாக்கெடுப்பு நடைபெற இருந்தது.
மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அதிபர் முய்சு தலைமையில் புதியாக நியமிக்கபட்டுள்ள மந்திரிகளுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள், ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற மாலத்தீவு முற்போக்கு கட்சி எம்.பி.க்களுக்கும் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அதன்பின்பு கைகலப்பு ஏற்பட்டது.
எம்.பிக்கள் சபாநாயகர் இருக்கை அருகே சென்று கோஷம் இட்டனர்.தொடர்ந்து எம்.பிக்கள் அடி உதையில் இறங்கியதுடன் தலை முடியை பிடித்து அடித்து கொண்டனர்.
இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் மோதிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/Madhav_khu/status/1751560288389013642
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
