Breaking News

பெண் நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரம் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப் பதிவு தனிப்படை அமைப்பு

அட்மின் மீடியா
0

பா.ஜ.க பெண் நிர்வாகியை வீடு புகுந்து தாக்கிய விவகாரத்தில், அக்கட்சியின் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படைஅமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

பாஜக முக்கிய நிர்வாகியான அமர் பிரசாத் ரெட்டி மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூ பகுதியை சேர்ந்தவர் தேவி. தேவியின் தங்கை ஆண்டாள் பாரத ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவியாக பதவி வகித்து வருகின்றார். கடந்த 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை ஒட்டி சித்ரா நகர் பகுதியில் இருந்து ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக ஆண்டாளுக்கும், அதே கட்சியை சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், மகளிர் அணியை சேர்ந்த நிவேதா, கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஆண்டாள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேவியையும், தங்கை ஆண்டாளையும் தாக்க தொடங்கியுள்ளனர். இதில் அவர்கள் படுகாயமடைந்த நிலையில், அமர்பிரசாத் ரெட்டி மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் ஓட்டுனர் ஸ்ரீதர் , நிவேதா மற்றும் கஸ்தூரி உள்ளீட்டோர் மீது கோட்டூர் புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

வன்கொடுமை தடுப்புச் சட்டம், அத்துமீறி நுழைந்து தாக்குதல், காயப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சைதாப்பேட்டை கிழக்கு மண்டல் பாஜக துணை தலைவர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றவர்களை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்நிலையில் பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவாகினர். அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியைத் தாக்கியதாக அமர் பிரசாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தகவல் வெளியாகியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback