திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்ன என்ன
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார்
திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இம்மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார்.
இளைஞர் அணியின் மாநில மாநாட்டிற்கு அனுமதியளித்த ஜனநாயகப் பாதுகாவலர் கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி!திமுகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர், கடந்த பத்தாண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்பட்ட, தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் ஜனநாயகப் பாதுகாவலராகத் திகழ்ந்து வரும் நிலையில், தன்னால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அனுமதி தந்து, அதனை மாநில உரிமை மீட்பு முழக்கமாக முன்னெடுக்கச் செய்த இளைஞர் அணியின் தாயுமானவரான திமுகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு இந்த மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க அயராது பாடுபடும் முதலமைச்சருக்கு இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
மகளிர் வாழ்வில் தன்னம்பிக்கையை வளர்க்கும் விடியல் பயணம்!திமுகத் தலைவர் முதலமைச்சரின் தலைமையிலான திட்டங்கள் பலவும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், தமிழ்நாட்டின் அடியொற்றி, பல மாநிலங்கள் பின்பற்றுகிற வகையிலும் புகழ் பெற்றுள்ளன. முதலமைச்சராகப் பொறுப்பேற்று, தலைமைச் செயலகத்திற்குச் சென்றவுடனேயே மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற மகத்தானத் திட்டத்திற்குக் கையெழுத்திட்டார்
வரலாறு காணாத மழையிலும் மக்களைக் காத்த முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
உயிர்பலி நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது!
குலக்கல்வி முறையைப் புகுத்தும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்
மாநிலப் பட்டியலுக்குக் கல்வி-மருத்துவத்தை மாற்றுக
ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிடுக!
தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு வேலைகளில் தமிழர்களை நியமித்திடு
மாநிலங்களின் அதிகாரங்களைப் பறிக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம்
கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிடுக
நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான சூளுரைசமூக நீதி - மத நல்லிணக்கம்-சமத்துவம்-மாநிலங்களின் உரிமைகள்-தாய்மொழி வளர்ச்சி, பரவலான பொருளாதாரக் கட்டமைப்பு, மனித உரிமை இவற்றைக் கொள்கைகளாகக் கொண்ட இயக்கங்களின் ஒருங்கிணைப்பான ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்குவதிலும், வழிகாட்டுவதிலும் முன்னணி பங்காற்றி வருபவரும்,
மனிதநேய சக்திகளை ஒன்றிணைத்தால், பாசிசத்தை வீழ்த்திக் காட்ட முடியும் என 2019 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியவருமான முதலமைச்சர்-திமுகத் தலைவரின் வழிகாட்டுதலில், இயங்கும் திமுக இளைஞர் அணி, திமுகத் தலைவரின் கட்டளைக்கேற்ப
2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் முன்னின்று செயலாற்றி, தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, ‘ஹிட்லர்களின் தோல்வி ஸ்டாலினிடம்தான்’ என்ற வரலாற்று மரபின் தொடர்ச்சியை நிரூபிக்கும் வகையில்,
இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டும் என 25 க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும் CLICK HERE
Tags: அரசியல் அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி