நீட், ஜே.இ.இ பயிற்சி மையங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதித்த கல்வி அமைச்சகம் முழுவிவரம்
பயிற்சி மையங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் விதித்த கல்வி அமைச்சகம் என்ன என்ன முழுவிவரம்
நீட், ஜே.இ.இ தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய கல்வி அமைச்சகம் அதன்படி
எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக பணியமர்த்தக் கூடாது.
பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்க கூடாது
மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக்கூடாது.
காலை வேலைகளில் முன்கூட்டியும் மாலையில் அதிக நேரம் கடந்தும் பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது.
பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.
பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தால் அடுத்த தினத்தில் தேர்வுகள் வைக்கக்கூடாது.
மாணவர்களைச் சேர்ப்பதற்காக பயிற்சி நிறுவனங்கள் தவறான வாக்குறுதிகளை அளிக்கவோ, ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதத்தை பெற்றோருக்கு அளிக்கவோ கூடாது
பயிற்சியின் தரம், வழங்கப்படும் வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் தொடர்பான எந்தவொரு தவறான விளம்பரத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வெளியிடக் கூடாது
விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழு தகவல்கள் தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்
https://www.education.gov.in/sites/upload_files/mhrd/files/Guideliens_Coaching_Centres_en.pdf
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்