துபாய் மெட்ரோ பயணிகள் NOL கார்டு ரீசார்ஜ் குறைந்த பட்சம் 20 AED என அறிவிப்பு dubai metro nol card
அட்மின் மீடியா
0
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் நகரில் உள்ள மெட்ரோ ரயில் பிரெஞ்சு நிறுவனமான கியோலிஸ் மற்றும் ஜப்பானிய நிறுவனமான எம்எச்ஐ ( மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் ) ஆகியவற்றின் கூட்டமைப்பால் கியோலிஸ்-எம்எச்ஐ என இயக்கப்படுகிறது
இவை துபாயில் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் ஆகியவை செயல்பாட்டில் உள்ளன இந்த மெட்ரோவில் பயணிக்கும் மக்களுக்கு NOL கார்டு உள்ளது
இந்நிலையில் வரும் ஜனவரி 15 முதல், பயணிகள் உபயோகப்படுத்தும் NOL கார்டின் குறைந்தப்பட்ச கட்டணம் 7.50AED உயர்த்தப்பட்டு 15.00 AED ஆக இருக்கும்.
அதை போல் குறைந்தபட்ச ரீசார்ஜ்- டாப் அப் 5.00 , 10.00 AED, நீக்கப்பட்டு 20.00 AED ஆக இருக்கும் என்று துபாய் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது
#RTA is implementing a new nol card top up requirement of AED 20 only at Metro Station Ticket Offices as of January 15, 2024, to ensure a seamless navigation experience and minimise wait times.
மேலும் விவரங்களுக்கு:-
https://twitter.com/rta_dubai/status/1743315871416701204
Tags: வெளிநாட்டு செய்திகள்
