Breaking News

சென்னையில் தமிழக அரசு வேலை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னையில் தமிழக அரசு வேலை பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC-A), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி. ஆலோசனை, சட்டம். உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த சேவை மையம், வட சென்னை-க்கான தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களுக்காக கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள்விண்ணப்பிக்கலாம்.

மூத்த ஆலோசகர் (Senior Counsellor) (காலிப்பணியிடம் 1)

M.S.W (Master's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். ஆலோசனை உளவியல் M.SC (Counselling Psychology). வளர்ச்சி மேலாண்மை (Development Management) mg σι 6 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து காக்கும் அரசு அல்லது அரசு சாராத திட்டங்களுடன் ஒரு நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். (அல்லது) ஒரு வருட கால அனுபவத்தில், அதே அமைப்புக்குள்ளேயே அல்லது அதற்கு வெளியே பணிபுரிந்திருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். வேலை தொடர்பாக பயணம் மேற்கொண்டால் பயணப்படி வழங்கப்படும். மாத ஊதியம் ரூ.20,000/ஆகும்.

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) (காலிப்பணியிடம் 1)

ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளுரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6400/- ஆகும்.

மேற்காணும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 14.02.2024 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம். சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 01 என்ற முகவரியில் நேரடியாகவும், மின்னஞ்சல் (oscnorthchennai@gmail.com) மூலமாகவும் விண்ணப்பம் செய்திடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/01/2024010918.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback