Breaking News

தமிழ்நாட்டில் முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் முதல்முறையாக பனைமரம் வெட்டியவர் மீது வழக்குப்பதிவு திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் மாநில மரமான பனைமரத்தை வெட்டியதற்காக பிரிவு 427-ன் கீழ் குன்னலூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கீழ சேத்தி பகுதியில் ஊராட்சி மன்றத் தலைவர் வரமதியின் கணவர் பூமிநாதன், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட நிலத்தில் மயான பராமரிப்புக்காக பனை மரங்களை வெட்டினார்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் பார்த்திபன் நேரில் சென்று விசாரணை நடத்தி அதன் பிறகு பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடத்தில் பனை மரங்களை வெட்டிய குற்றத்திற்காக 427வது பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் கலாச்சார அடையாளமாக விளங்கும் பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என விவசாய நிதிநிலை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback