Breaking News

வங்காளதேச தேர்தல் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராகிறார் முழு விவரம் Bangladesh PM Sheikh Hasina Wins 5th time

அட்மின் மீடியா
0

வங்காளதேசம் நாட்டில் 12வது பாராளுமன்ற தேர்தல் நேற்று 07.01.2024 ம் தேதி  நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

350 தொகுதிகள் கொண்ட தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசாங்கத்தால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். எனவே 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.நாடாளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மீதமுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த தேர்தலுக்கு முன்னர் நடுநிலையான அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பங்களாதேஷ் முக்கிய எதிர்கட்சியான தேசியவாத கட்சி தலைவருமான கலீதா ஜியா (வயது 78)வின் இந்த  கோரிக்கையினை ஆளும் அவாமி லீ கட்சி பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. மேலும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின.

இந்த தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா  கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஹசீனா பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 965. அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். மேலும் ஷேக் ஹசீனா இந்த தொகுதியில் இருந்து 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்

300 இடங்களுக்கு நடந்த தேர்தலில், 264 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும் என வங்காளதேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback