Breaking News

அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நேரலையில் பார்க்க Avaniyapuram Jallikattu Live 2024

அட்மின் மீடியா
0

இந்த 2024 ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று 15-ம் தேதி நடைபெறுகிறது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். 

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கும், சிறந்த காளைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட உள்ளது கார்! அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டி நேரலையில் பார்க்க


சன் டிவி நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=se9ndrUE_Mo

தந்தி டிவி நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=WmomFqJJudo

நியூஸ் தமிழ் 24/7 நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=1kH7aquC6NM

ஐபிசி தமிழ் நேரலை

CLICK HERE

https://www.youtube.com/watch?v=2VuWbCZa_Kg

விகடன் டிவி நேரலை 

CLICK HERE

https://www.youtube.com/watch?v=C3tAjIzyM4s


அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளை ஏற்றி வாகனங்கள் வெள்ளக்கல் சாலை, திருப்பரங்குன்றம் சாலை, முத்துப்பட்டி சாலை வழியாக வருபவர்களுக்கு முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி. காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்திக் கொள்ளலாம்.

போட்டி நடைபெறும் இடத்திற்குள் காளைகள், அதன் உரிமையாளர்கள் அவருக்கு உதவியாளராக ஒருவர் மட்டுமே வரிசையில் நிற்க அனுமதிக்கப்படுவர்.

போட்டியில் பங்கேற்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு, உரிய மருத்துவ தகுதிச்சான்றிதழை கொண்டுவர வேண்டும்.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர், உதவியாளர் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.காளையின் மூக்கணாங்கயிற்றை நீக்குவதற்கு கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களையோ காளையின் உரிமையாளர் கொண்டுவரக் கூடாது.

மூக்கணாங்கயிற்றை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டி நடைபெறும் பகுதியில் உள்ள வீட்டின் மாடிகளில் வீட்டின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. வெளி நபர்கள் யாரும் வீட்டின் மாடியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள பத்து மதுக்கடைகளுக்கும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 7 மதுக்கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback