இந்தியாவின் நீண்ட கடல் பாலம் அடல் சேது பயன்படுத்த டோல் கட்டணம் எவ்வளவு தெரியுமா Atal Setu toll rates
அடல் சேது பாலத்தை பயன்படுத்துவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம்...எவ்வளவு தெரியுமா
கார் ஒன்று இந்த அடல் சேது பாலத்தில் செல்ல ஒருவழிப் பயண கட்டணம் ரூ.250 ஆகவும், திரும்பும் கட்டணம் ரூ. 375 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி பாஸ் ரூ. 625 ஆகவும், மாதாந்திர பாஸ் ரூ. 12,500 ஆகவும் உள்ளது.
இந்தியாவின் மிக நீண்ட கடல்பாலமான அடல் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று திறந்து வைக்கிறார்.
இந்த பாலம் மும்பையில் உள்ள தீவு நகரான சேவரியில் இருந்து ராய்காட் மாவட்டம், உரான் தாலுகாவில் உள்ள நவா சேவாவில் முடிவடைகிறது.
இந்த பாலம் இந்தியாவில் இதுவரை கட்டப்பட்ட மிக நீளமான கடல் பாலமாகும்.
22 கி.மீ. நீளமுள்ள இந்தப் பாலம் 16.5 கிலோ மீட்டர் கடலிலும், 5.5 கிலோ மீட்டர் நிலத்திலும் அமைந்துள்ளது
ஆறு வழித்தடங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட பாலம், 17, 840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கான அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்சாக்கள், டிராக்டர்கள் இந்த கடல் பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படாது.
கார்கள், டாக்சிகள், இலகு ரக மோட்டார் வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் இரு அச்சு பேருந்துகள் போன்ற வாகனங்கள் செல்லலாம். .
உலகின் மிக நீளமான கடல் பாலம் சீனாவில் ஹாங்காங், மக்காவ் மற்றும் ஜுஹாய் நகரங்களை இணைக்கும் கடல்வழிப் பாலம் ஆகும்
இந்த பாலத்தின் ட்ரோன் வீடியோ பார்க்க:-
கிளிக் செய்யவும்
https://twitter.com/pulse_pune/status/1745095807605285128
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

