உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேரலையில் பார்க்க Alanganallur Jallikattu Live 2024
அட்மின் மீடியா
0
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேரலையில் பார்க்க Alanganallur Jallikattu Live 2024
பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடந்து முடிந்தது.அதேபோல் இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
இப்போட்டியில் 1200 காளைகளுக்கும், 700 மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் மூலம் QR கோடுடன் கூடிய டோக்கன் வழங்கப்பட்டுள்ளது
போட்டியில் மாலை வரை 10 சுற்றுகள் ஆக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் 50 வீரர்கள் களமிறங்குவர். அதில் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.
இந்நிலையில் இன்றைய போட்டி மாடு பிடி வீரர்கள் உறுதிமொழியுடன் தொடங்கியது போட்டிகளில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க நாணயம் சைக்கிள் பீரோ கட்டில் மெத்தை பித்தளை பாத்திரங்கள் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அதிக காளைகளை பிடிக்கும் மாடு பிடி வீரர்களுக்கு தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.
களத்தில் சிறப்பாக விளையாடும் காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பாக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரும் அதே போன்று பைக்கும் பரிசாக வழங்கப்படுகிறது.