Breaking News

தலையில் பாய்ந்த 9 MM புல்லட் பாய்ந்தது தெரியாமல் 4 நாட்கள் இருந்த நபர் அடுத்து நடந்தது தான் டிவிஸ்ட்

அட்மின் மீடியா
0

பிரேசில் நாட்டில் உள்ள புகழ்பெற்ற கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோ கடற்கரையில் மேடியஸ் ஃபேசியோ Mateus Facio  என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் இருந்தார்

அப்போது திடீரென ஃபேசியோவின் தலையில் ஏதோ பட்டு அவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது அதன்பின்பு சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நின்றதால், முதலுதவி செய்து கட்டு போட்டுவிட்டு ஃபேசியோ குளித்து விட்டு நண்பர்களுடன் மீண்டும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்

அதன்பின்பு தனது சொந்த ஊரான ஊரான மினாஸ் கெராய்ஸ்  சென்றுள்ளார், அங்கும் புத்தாண்டு கொண்டாடி உள்ளார், இப்படியாக 4 நாட்கள் கழிந்தது அதன்பின்பு அவரது கை செயல் இழந்துள்ளது உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய்யப்பட்டதில் அவரது தலையில்  9 MM புல்லட் துப்பாக்கி குண்டு இருப்பதும் அது மூளை பகுதியில் அழுத்தம் கொடுத்து வருவதும், அதன் காரணமாக அவர் வலது கை செயலிழக்க தொடங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

அதன்பின்பு அறுவை சிகிச்சையின் மூலம் அந்த துப்பாக்கி குண்டு  வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். தற்போது ஃபேசியோ உடல்நலம் தேறி வருகிறார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பேசியோ நான் தலையில் கல்தான் தாக்கியிருக்கும் என்று நினைத்தேன். காரணம், அப்போது துப்பாக்கிச் சத்தம் எதுவும் என் காதில் கேட்கவில்லை. அதனால் யாரோ தன்மீது கல் எறிந்ததாக நினைத்தேன். என கூறிய அவர்  மேலும் காவல்துறையினருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்  என தெரிவித்துள்ளார்

மேலும் விவரங்களுக்கு:-

இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/AtualizadoSaber/status/1749000596370113004

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback