Breaking News

சீனாவில் 7.2 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு

அட்மின் மீடியா
0
சீனாவில் 7.2 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த  நிலநடுக்கம் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு 

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்

                       


இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

டெல்லியில் கடந்த 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 6.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டு இருந்தது அதேபோல் நேற்று சீனாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது

சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் இரவு 11 மணியளவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வால் வீடுகளில் உள்ள பொருட்களும் அதிர்ந்தன. உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர் இந்த நில அதிர்வு ஏற்பட்டு அடுத்த சில மணி நேரங்களில் தலைநகரில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback