7 ஆண்டுகளுக்கு பிறகு 29 பயணிகளுடன் மாயமான விமானத்தின் பாகங்கள் வங்கக்கடலில் கண்டுபிடிப்பு... ! Indian Air Force An-32 aircraft
கடந்த 2016 ஜூலை 22ம் தேதி இந்திய விமானப் படைக்கு சொந்தமான் விமானம் An-32 (K-2743) விமானம் சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற விமானம் வங்கக்கடல் பகுதியில் மாயமானது.
இந்த விமானத்தில் 29 பேர் இருந்தனர். இதனைத்தொடர்ந்து, காணாமல் போன விமானம் மற்றும் பணியாளர்களை தேடியதில் காணாமல் போன பணியாளர்களையோ அல்லது விமானத்தையோ கண்டுபிடிக்க முடியவில்லை அதனை தொடர்ந்து விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வங்கக்கடல் பகுதியில் காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் 8 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
சென்னை கடல் பகுதியில் இருந்து 310 கி.மீ தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. என தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது
இந்நிறுவனம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி கப்பல் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், காணாமல் போன ஏ.என்-32 கடைசியாக தென்பட்ட இடம் என அறியப்பட்ட இடத்தின் கடலுக்கடியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் இருப்பது தெரியவந்தது
இந்த விமான பாகங்கள் காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்
