Breaking News

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு donald trump defamation case

அட்மின் மீடியா
0

30 ஆண்டுகளுக்கு முன்பு டிரம்ப் தன்னை ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் பாலியல் துன்புறுத்தியதாக கரேல் எழுதிய புத்தகத்தில் தெரிவித்தார். 1995-96 களின் நடுப்பகுதியில் மன்ஹாட்டனில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஷாப்பிங் செய்யும்போது டிரம்ப் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடிவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றார், அப்போது பயத்தில் தான் போலீசில் புகார் செய்யவில்லை என்று கரோல் அந்த புத்தகத்தில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் டிரம்ப்போ, ”கரோலைப் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை. தனது புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க கதையை உருவாக்கியுள்ளார். கரோல் புகழுக்கான பசியுடன் இருப்பதாகவும், தனக்கு எதிரானவர்களுக்கு எதிராக பேசுவதற்கு ஆதரவாளர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.



அதனை தொடர்ந்து தனது குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்ததோடு, நம்பகமான பத்திரிகையாளர் என்ற தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் ஜீன் கரோல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.680 கோடி நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்ற தீர்ப்பை  எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டொனால்ட் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback