தென்காசி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!
தென்காசி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும் குற்றாலம் சுற்றுலா சென்று வீடு திரும்பிய காரும் எதிர்பாரதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பலியான 6 பேரும் புளியங்குடியை சேர்ந்தவர்கள் என்றும் குற்றாலத்தில் குளித்து விட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டு இருந்த இந்த விபத்து நேரிட்டதாகவும் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து குறிந்த சம்பவம் இடம் வந்த போலீசார் பிரதேங்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்
முதற்கட்ட தகவலின்படி, இந்த விபத்தில் கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணியன், மனோகரன், போத்திராஜ் ஆகிய 6 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
