Breaking News

கூடிய விரைவில் 5G சேவைக்கு கூடுதல் கட்டணம். ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ் Jio, Airtel may charge up to 10% more for 5G

அட்மின் மீடியா
0

5G சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன என தகவல்கள் வெளியாகி உள்ளது

மேலும் 5G அன்லிமிடெட் சேவையை திரும்ப பெறுவதோடு 5G சேவைக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க படலாம் என கூறப்படுகிறது.


சோதனை அடிப்படையில் 4G கட்டணத்தில் 5G சேவைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த விலை உயர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது

இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு  சோதனை அடிப்படையில் 4 ஜி கட்டனத்தில் 5ஜி சேவைகளை வழங்கி வருகின்றது

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்கள் தங்களுடைய அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் தங்களுடைய மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைந்தபட்சம் 20% அதிகரிக்கும் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஆனால் இது குறித்து மொபைல் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback