Breaking News

500 ரூபாய் நோட்டில் கடவுள் ராமர் படம் ? உண்மை என்ன ₹500 Note To Feature Ram Mandir, Lord Ram?

அட்மின் மீடியா
0
கடவுள் ராமர் படம் போட்டு 500 ரூபாய் நோட்டு வர உள்ளதா ? உண்மை என்ன ₹500 Note To Feature Ram Mandir, Lord Ram?
இந்தியாவின் புதிய 500 ரூபாய் நோட்டில் ராமர் உருவம் அச்சிடப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நம் இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படமே அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இது என்ன புதுசா இருக்கே என இனையத்தில் தேடியபோது  இது போல் 2022 ம் ஆண்டு முதல் இது போல் பரவி வருவது தெரிந்தது


இந்தியாவின் புதிய 500 ரூபாய் நோட்டுகளில் ராமர் படங்கள் எதுவும் அச்சிடப்படவில்லை. ராமர் படத்துடன் கூடிய புதிய 500 ரூபாய் நோட்டுகள் இருந்தால், அதை ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவித்திருக்கும். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் இதுபோன்ற செய்திகள் எதுவும் இல்லை. 

ராமர் படத்துடன் வாட்ஸப் பேஸ்புக்கில் வரும் 500 ரூபாய் நோட்டு  பொயானது அது யாரோ எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஆகும்

இதுவரை இது போல் எந்த ஒரு நோட்டும் அதிகாரப்பூரவ மாக வெளியாகவில்லை , எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பவேண்டாம்

Tags: மறுப்பு செய்தி FACT CHECK

Give Us Your Feedback