அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு - அவதூறு பரப்பிய யூடியூபருக்கு நீதிமன்றம் உத்தரவு
அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு - அவதூறு பரப்பிய யூடியூபருக்கு நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன், தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் பரப்பியதாக, அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி உயர்நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருந்தார் அந்த வழக்கில் யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோட் உத்தரவு!
யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை பரப்பியதாக, அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா சென்னை உயர்நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்சராவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
யூடியூபில் கருத்துகளை வெளியிட உரிமை உள்ளது என்றாலும் தனிப்பட்ட நபரின் உரிமையில் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.முன்னதாக யூடியூபர் ஜோ மைக்கேல் வெளியிட்ட அவதூறு கருத்துகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது என்று அப்சரா ரெட்டி புகார் தெரிவித்த நிலையில் அவருக்கு எதிரான வீடியோக்களை யூடியூபில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியது குறிப்பிடத்தக்கது
Tags: தமிழக செய்திகள்
